கிழக்கில் விகாரைகளுக்குஇலங்கை-சீனா பௌத்த  நட்பு உறவு  சங்கத்தினால் உலர் உணவுப்பொருட்கள்.

ஹஸ்பர்_
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் இன்று (23)காலை கோவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்டத்தில் உள்ள விகாரைகளுக்கு  இலங்கை-சீனா பௌத்த  நட்பு உறவு  சங்கம் நன்கொடை அளித்த உலர் உணவு பொதிகளை வழங்கினார்.

இலங்கை-சீனா பௌத்த நட்பு சங்கத்தின்  வேண்டுகோளின் பேரில் ஆளுநரால் உலர் உணவு பொதிகள் பெறப்பட்டது.
முதல் கட்டமாக  அம்பாரை மாவட்டத்தில் உள்ள விகாரைகளுக்கு  உலர் உணவு பொதிகளை, விநியோகிக்க விசேட அதிரடிப்படையினர்களிடம் திருகோணமலையில் உள்ள ஆளுனர் செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
 இதில் கிழக்கு  மாகாண பிரதம  செயலாளர் துசித  பி.வனிகசிங்க மற்றும் ஆளுநரின் செயலாளர் எல்.பி. மதனநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.