கண்டி திருமலை பிரதான வீதியில் மரம் முறிந்து வீழ்ந்ததில் போக்குவரத்து ஸ்தம்பிதம்

ஹஸ்பர் ஏ ஹலீம்_
கடும் அடை மழை காரணமாக கண்டி திருகோணமலை கந்தளாய் வீதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இன்று (22) மாலை மரம் முறிந்து வீழ்ந்ததில் பிரதான வீதியில் உள்ள மின்கம்பமும் சேதமாக்கப்பட்டுள்ளது கந்தளாய் 91 ம் கட்டை எரிபொருள் நிரப்பு நிலையத்தினை அண்மித்த பகுதியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது