மட்டக்களப்பு  வணக்கஸ்தலங்களில் 50பேர் வழிபட அனுமதி

மட்டக்களப்பு மாவாட்ட கொவிட் செயலனிக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஏற்கனவே  மதஸ்தலங்களுக்கு 25 நபர்கள் மாத்திரமே வழிபடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
எதிர் வரும் காலங்களில் கிறிஸ்மஸ் மற்றும் புதுவருடப்பிறப்பு போன்றவை வருவதனால் மதத்தலைவர்கள் பலர் இவ் எண்ணிக்கையை அதிகரிக்க கோரியிருந்தார்கள் இவ்விடயம் இன்று மதத்தலைவர்கள் சுகாதார அதிகாரிகள் மற்றும் பொலிஸார் அதிகாரிகள் அனைவருடனும் கலந்துரையாடி ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டது.
அதனடிப்படையில் வணக்கஸ்தலங்களில் 50 நபர்கள் வழிபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டதோடு சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் அத்தோடு வருகை தருகின்ற ஒவ்வொரு நபருடைய விபர பதிவேடுகளை கட்டாயம் பேண வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சில மேற்கத்திய நாடுகள் நாளுக்கு நாள் இறுக்கமான நடைமுறைகளை  கையாண்டு வருகின்றனர்  இருந்தபோதும் இலங்கையில் எமது சுகாதார தரப்பினர்கள் பொலிஸார் பொதுமக்கள் ஆகியோர் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட்டு வருவதன் காரணமாக இதனுடைய தாக்கம் பெரிதளவில் வரவில்லை அதற்காக நாங்கள் சுதந்திரமாக வெளியில் அவதானமின்மையுடன் நடமாடாமல் சமுக பொறுப்பை உணர்ந்து பண்டிகை காலங்களில் பொறுப்புடன் சுகாதார வழிமுறைகளை பின்பற்றவும் என அரசாங்க அதிபர் கருணாகரன் தெரிவித்தார்.