கிண்ணியாப்பிரதேசத்தில் கொரனா தொற்று பல்வேறு விடயங்களுக்கு பூட்டு மீறுவோர்மீது சட்டநடவடிக்கை. பிரதேச செயலாளர்.

(பொன்ஆனந்தம், ஹஸ்பர் ஏ ஹலீம் )

கிண்ணியாவில் 6பேர் கொரோனா தொற்றுக்கு இனம்காணப்பட்டுள்ளதனையடுத்து அத்தியாவசிய உணவு விடயம் தவிர்ந்த அனைத்து விடயங்களையும் மூட தீர்மானித்துள்ளதாக பிரதேச செயலாளர்  எம்.முகமட் கனி தெரிவித்தார்

கிண்ணியாவில் உள்ள அன்னல் நகர் மற்றும் மாஞ்சோலை ஆகிய கிராமங்களில் இத்தொற்றாளர்கள் இனம்காணப்பட்டுள்ளனர்.

 அன்னல் நகரில் ஒருவரும் மாஞ்சோலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவரும் இனம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

இதனையடுத்து பிரதேச செயலகத்தில்  நேற்று இதுபற்றிய விசேடமாக நடைபெற்ற கூட்டத்தில்

பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

கிண்ணியா பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பாடசாலைகள் தனியார் கல்விநிலையங்கள் மத்ரஸாக்களை தற்காலிகமாக மூடுதல், மதஸ்தலங்கள் அனைத்தும் மறு அறிவித்தல்வரும்வரை மூடப்படும், மீன்சந்தை இறைச்சிக்கடைகள் மூடப்படும், பாமசி மரக்கறிக்கடைகள் பலசரக்குக்கடைகள்  சுகாதார வழிமுறைகளை பின்பற்றி திறக்க அனுமதி, உணவுச்சாலைகளை மூடல், வீடுகளுக்கு மீன் இறைச்சிகள் போன்ற ஏனைய உணவுப்பொருட்களை விநியோகிப்பதற்கான நடைமுறைகள் ,விழாக்கள் அனைத்தும் தற்காலிகமாக இடைநிறுத்தம்., தேவையற்றவிதத்தில் வெளியில் சுற்றித்திரிதலை தடுத்தல்.

 இச்சட்ட திட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுத்தல் எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில், பிரதேச, நகரசபை தலைவர்கள், பொதுச்சுகாதார அதிகாரிகள், பொலிசார் மற்றும் இராணுவத்தினர், பள்ளிவாயல்களை பிரதிநிதிகளும் கலந்து கொண்டதாக பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்..