எங்களது சமூகத்தை கட்டியெழுப்பும் தார்மீக கடமையை ஆற்றுவதற்கு பலம் சேருங்கள்

மட்டக்களப்பில் தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தினர் வேண்டுகோள்.
 (ஆரையம்பதி நிருபர்)
எங்களோடு கரம் கோர்த்து எங்களது சமூகத்தை கட்டியெழுப்பும் தார்மீக கடமையை ஆற்றுவதற்கு பலம் சேருங்கள் என தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தின் பணிப்பாளர் ஜீவரெத்தினம் தவேஸ்வரன் கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்……
உங்கள் பிள்ளைகளாகிய நாங்கள் இந்த ஊடக சந்திப்பை நடாத்துவதன் நோக்கம் தமிழ்இளையோர் மக்கள் இயக்கத்தின் சட்டரீதியான பதிவை மக்களுக்கு தெரியப்படுத்துவதற்கும்எங்களுடைய செயற்பாடு பற்றிய தெளிவுபடுத்தலை மக்களுக்கு கொடுப்பதற்கும் ஆகும்.
நாங்கள் அரசியலுக்கு அப்பால்பட்டு எமது மக்களுக்காக வட கிழக்கு மற்றும் மலையகபரப்பில் செயற்பட்டு வருகின்றோம் இதற்கான சட்டரீதியான பதிவு அங்கீகாரத்தையும் நாங்கள்பெற்று இருக்கின்றோம் என்பதனை மக்களுக்கு தெரியப்படுத்துவதோடு, இதற்கு ஆதாரமாகபதிவுச் சான்று வழங்கப்பட்டு இருக்கும் அதேவேளை கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம்
26ம் திகதி வெளியீடு செய்யப்பட்ட தினகரன், தினமின மற்றும் டெய்லி நியூஸ் பத்திரிகைகளில்பதிவாளர் திணைக்களம் சட்டரீதியான வெளிப்படுத்தல்களையும் செய்திருக்கின்றது.
எனவே இனிவரும் காலங்களில் தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தின் பெயரை எங்களது எழுத்துமூலமான அனுமதியில்லாமல் எவரும் பயன்படுத்த முடியாது என்பதனை இந்த ஊடகங்கள்மூலமாக அனைவருக்கும் தெரியப்படுத்துகின்றோம்.
மேலும் இலங்கை முழுவதும்; செயற்படுவதற்கான அங்கிகாரத்தை இந்த பதிவின் மூலம்நாங்கள் பெற்று இருக்கின்றோம் என்பதோடு எங்களுக்கு தெரிந்த வகையில் அரசியலுக்குஅப்பால் மக்களுக்கான சேவைக்காக தேசிய ரீதியில் பதிவு செய்யப்பட்ட முதலாவது தமிழ்அமைப்பு என்ற சிறப்பும் தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்திற்கே உரித்துடையதாகும்.
எமது மக்களுக்கு அரசியலுக்கு அப்பால் நிறைவேற்ற வேண்டிய தார்மீக கடமைகள் அதிகம் காணப்படுவதோடு அவற்றை இனங்கண்டு உங்கள் பிள்ளைகளாகிய நாங்கள் நிறைவேற்றுவோம் என்று உறுதியளிப்பதோடு எமது மக்களுக்காக தமிழ் இளையோராகிய உங்கள் பிள்ளைகள் இருக்கின்றோம் என்பதை உரிமையுடனும் மகிழ்ச்சியுடனும் ஊடகங்கள் மூலமாக எமது மக்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்.
தாய்மொழி கலாசாரப் பண்பாடுகளைப் பாதுகாத்து அறிவார்ந்த ஆரோக்கியமான சமூகம் ஒன்றை கட்டியெழுப்புவதற்கு தமிழ் இளையோர் மக்கள் இயக்கம் அயராது உழைக்கும் என்பதனையும் உங்கள் பிள்ளைகளாகிய நாங்கள் தெரியப்படுத்துகின்றோம்.
எனவே பேரன்பிற்கும் மதிப்பிற்குமுரிய எமது உறவுகளே!, பாசத்திற்குரிய இளையோர்களே! எங்களோடு கரம் கோர்த்து எங்களது சமூகத்தை கட்டியெழுப்பும் தார்மீக கடமையை ஆற்றுவதற்கு பலம் சேருங்கள்.
உலகமெங்கும் பரந்து வாழ்கின்ற எமது உறவுகளே தங்களால் இயன்றவகையில் எமது பயணத்திற்கான ஆதரவை வழங்கி தங்களின் தார்மீக கடமையை நிறைவேற்றுங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்தார்