அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி
பைஷல் இஸ்மாயில் –
அம்பாறை மாவட்ட அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில், கொவிட்19வைரஸ் தொற்றின் காரணமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கினால் முடக்கம் செய்யப்பட்ட பிதேசங்களில்இரண்டாம் கட்ட நிவாரண உதவிகளை வழங்குவது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் (20) அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்,
கணக்காளர் ஏ.எல்.எம்.றிபாஸ், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஹூஸைனுதீன், நிருவாகஉத்தியோகத்தர், கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் உள்ளிட்ட பலர் கலந்து இதில் கொண்டனர்.
இக்கூட்டத்தில் பிரதேச செயலாளர் கருத்துத் தெரிவிக்கையில்,
சுய தனிமைப்படுத்தலில் உள்ளதனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் 10,000 ரூபா பெறுமதியான நிவாரணப்
பொதி வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கில் இருந்த சமுர்த்தி பயனாளிகள் மற்றும் சமுர்த்தி பெறதகுதியான குடும்பங்கள் என 9,107 குடும்பங்களுக்கு 5,000 ரூபா பெறுமதியான நிவாரணம்முதல்கட்டமாக வழங்கப்பட்டுள்ளன.
முதலாம் கட்ட நிவாரண நடவடிக்கையின்போது ஏற்பட்ட குறைபாடுகள், பிரச்சினைகளைகண்டறிந்து, 2 ஆம் கட்ட நிவாரண உதவியை சரி செய்து துரிதமாக வழங்குவதற்கு நடவடிக்கைஎடுக்குமாறு பிரதேச செயலாளர் இதன்போது கேட்டுக்கொண்டார்.
அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் ஏற்பட்ட கொவிட்19 வைரஸ் கொத்தணியினால்காணப்படட அச்சமான நிலைமை தற்போது தணிந்துள்ளது. இருப்பினும் இனங்காணப்பட்ட சிலபிரதேசங்களில் இன்னும் கொவிட்-19 அபாய நிலைமை நீங்கவில்லை என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
எனவே, தொற்றாளர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. மக்கள் பாதுகாப்பான சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றி நடப்பதற்கும் தனிமைப்படுத்தப்பட வேண்டிய நபர்கள், குடும்பங்கள் தொடர்பில் சுகாதார பிரிவினருக்கு உடன் தகவல்களை வழங்கி உரியநடவடிக்கைகளை வழங்குவதற்கும் பிரிவுக்குப் பொறுப்பான அரசாங்க உத்தியோகத்தர்கள் தயார்
நிலையில் இருக்க வேண்டுமென அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்தார்.