(கதிரவன்)
திருகோணமலையில் நேற்று 21தொற்றாளர்கள் இனம் காணப்பட்டதையடுத்து மூன்று கிராம சேவகர்பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.
அத்துடன் திருமலையில் தொற்றுக்குள்ளனவர்களில் ஆறு பாடசாலை மாணவர்களும் உள்ளடங்கியுள்ளதாக இன்று காலை திருகோணமனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.