கிழக்கு ஆளுநரின் அதிரடி உத்தரவு. திருமலை கோட்ட பாடசாலைகளுக்கு பூட்டு.

ஹஸ்பர் ஏ ஹலீம்_

திருகோணமலை வலயக் கல்வி பிரிவில்  உள்ள  திருல்லை கோட்டத்து அனைத்து பாடசாலைகளையும் நாளை (21)முதல் மறு அறிவித்தல் வரை மூடுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுரதா யஹம்பத் மாகாண கல்வி செயலாளருக்கு சற்று முன் அறிவுறுத்தினார்.

திருகோணமலை நகர எல்லையில் பதினைந்து கொரோனா நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதனால் இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆளுனரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.