மட்டு பதுளைவீதியில் இளைஞனின் சடலம் மீட்பு

செங்கலடி சுபா)

மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ்பிரிவுக்குட்பட்ட மரப்பாலம் குளத்தில் இன்று மாலை நீராடச்சென்ற இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு – சுவிஸ்கிராமத்தைச் சேர்ந்த 19 வயதுடைய அன்ரன்ராஜ் விதுசன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு சுவிஸ்கிராமத்தில் இருந்து இன்று காலை மரப்பாலத்திலுள்ள தமது உறவினர் வீட்டிற்கு வருகைத போதே இன்று மாலை மரப்பாலம் குளத்தில் குளிக்கச்சென்ற வேளையே நீரில் மூழ்கி இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பிரேதப்பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கரடியனாறு பொலிசார் மேலதிக விசாரணைகளை நடாத்திவருகின்றனர்.