கல்முனை பிராந்தியத்தில் 9054 பீ சி ஆர் , 5764 அன்டிஜன் 593 தொற்றாளர்கள் 156 பேருக்கு பூரண குணம்

(யு.எம்.இஸ்ஹாக்)

கல்முனை பிராந்திய சுகாதார பணிமனைக்குட்பட்ட 13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று வரை  14818 கொரனாவுக்கா PCR சோதனைகளும் , அன்டிஜன் சோதனைகளும் இடம் பெற்றுள்ள நிலையில் 593 கொவிட் – 19 தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ளனர்.
இதில்156 பேர் குணமடைந்துள்ளதோடு 437 பேர் பாலமுனை மருதமுனை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கல்முனை பிராந்தியத்தில் இரண்டு மரணங்கள் இடம் பெற்றுள்ளன
கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது
இன்று வரை 79 தொற்றாளர்கள் கல்முனை தெற்கு MOH பிரிவில் அடையாளப் படுத்தப்பட்டுள்ளதுடன் 07 பேர் பூரண சுகமடைந்துள்ளனர்.