கல்முனையில் ஜனாஸா எரிப்புக்கு எதிரான வெள்ளைக் கொடி போராட்டமும் அமைதி வழி கண்டன போராட்டமும்

(யு. எம்.இஸ்ஹாக்)

கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும் தற்போதைய அரசின் ஆதாரவாளராக இருந்தவருமாள ஏ.எம்.றியாஸ் (பெஸ்டர்) தலைமையில் இன்று (20) காலை கல்முனை அமானா வங்கி சதுக்கத்தில் வெள்ளைக் கொடி போராட்டமும் அமைதி வழி கண்டன போராட்டமும் இடம் பெற்றது.
அரசியல் செயற்பாட்டாளரும் விமர்சகருமான வபா பாறுக் உட்பட இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டு எதிர்ப்பு சுலோக அட்டைகளை ஏந்தி தங்களின் எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்
இந்த ஏற்பாட்டை செய்த பெஸ்டர் றியாஸ் அங்கு உரையாற்றுகையில் முதலில் இந்த அரசாங்கத்துக்கு ஆதரவாக இருந்தேன் என்பதற்காக வெட்கப்படுகின்றேன். பல நாடுகளில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யப்படுகின்ற போது எமது நாட்டில் மாத்திரம் எரிப்பதானது ஆட்சியாளர்களின் மன வைராக்கியத்தை வெளிப்படுத்தும் இனவாத செயற்பாடாகும்
ஜனாஸா எரிப்பை நிறுத்தும் வரை இந்த நாட்டில் முஸ்லிம்கள் இந்த அரசுக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகளா தொடர வேண்டும். இன்று எனது தலைமையில் இதனை ஆரம்பித்து வைத்துள்ளேன் அரசியில் வேறுபாடுகளை மறந்து எமது சமூகத்தின் கடைசிக் கடமைக்காக அனைவரும் ஒன்று பட்டு ஒருமித்த குரலில் இந்த நாட்டின் அரசாங்கத்துக்கும் சர்வதேசத்துக்கும் அழுத்தமாக தெரிவிக்க ஒன்று படுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசியல் செயற்பாட்டாளர் வபாபாறுக் அங்கு உரையாற்றும் போது நாங்கள் எங்களது உரிமையை அன்றி வேறு எதுவும் வேண்டி நிற்க வில்லை. உரிமைக்கான இப்போராட்டத்தில் இந்த நாட்டில் வாழும ஒவ்வொரு முஸ்லீமும் பங்கெடுக்க வேண்டும் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான அனுமதி கிடைக்கும் வரை ஒவ்வொரு இஸ்லாமிய சகோதரர்களும் தனிப்பட்ட முறையிலேனும் தங்களது கைகளில் வெள்ளைத் துணியைக் கட்டியாவது தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டுங்கள் என தெரிவித்தார்.