இஞ்சபாருங்கோ அங்க அப்பம் இஞ்ச றொட்டி

நம்மட முன்னாள் ஜனாதிபதி அப்பம் சாப்பிட்டபின்புதான் அங்கால போனவர் என்று ஒருகதை  உலாவினது.அதேமாதிரி நம்மட மட்டக்களப்பிலயும் நடந்திருக்கு.

எங்கட மீன்பாடும் தேன்நாட்டின் மட்டு மாநகரசபையின் வரவு செலவுதிட்டத்த வாக்கெடுப்பு நடக்கிறத்திற்கு  சில மணித்தியாலங்களுக்குமுன்பு மாநகரமுதல்வருடன் றொட்டியும்பிளேன்டியும் குடித்துவிட்டு ஆதரவாகத்தான் வாக்களிப்பேன் என்று சொல்லிவிட்டு சென்றவர் எதிராகத்தான் வாக்களிச்சவராம்.

ஏன் என்று விசாரிச்சா அவருடைய வட்டாரத்துக்கு ஒரு கிலோமீற்றர் கொங்கிற்பாதை  கிடைக்கும் அதனாலதான் வாக்களித்தேன் என்றாராம்.