திருமலையில் சில தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில்.

எப்.முபாரக்  2020-12-20.

 திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்தில் பெய்து வருகின்ற அடை மழை காரணமாக தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு,வடிகாண்களிலும் நீர் நிரம்பி வழிகின்றன.

இம்மாவட்டத்தின் கந்தளாய், கிண்ணியா,மற்றும் மூதூர்,திருகோணமலை போன்ற பகுதிகளில் கடுமையான மழை பெய்து வருகின்றது.
சிறு வீதிகள் மற்றும் தாழ் நிலப்பகுதிகளில் மழை நீர் நிரம்பியுள்ளன.
திருகோணமலை மாவட்டத்தின் கடற்கரையோரங்களில் கடல் அலைகளின் தாக்கம் அதிகரித்துள்ளதோடு கடல் கொந்தளிப்பாகவும் காணப்படுகின்றன.
மீனவர்கள் யாரும் கடலுக்கும் செல்ல வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது