அம்பாரை மாவட்டத்தில் கடும் மழை, கொறோனா முடக்கத்தில் உள்ள மக்கள் அவதி.

எம்.எல்.சரிப்டீன்)
அம்பாரை மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக காலநிலை மாற்றம் பெற்றுள்ளதுடன் கடும் மழையும் பெய்து வருகிறது.
அம்பாரை மாவட்டத்தின் பல பிரதேசங்களில்  சனிக்கிழமை முதல் மழை பெய்து வருகிறது. நேற்று நள்ளிரவு 2 மணிமுதல் கடும் அடை மழை பெய்துவருவதுடன் பாதைகள் போக்குவரத்துச் செய்ய முடியாதவாறு வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதன் காரணமாக தாழ் நில குடியிருப்புகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவில் கொரோனா தொற்றினால் முடக்கப்பட்டுள்ள சில பகுதிகளில் வாழும் மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உட்பட்டுள்ளனர்.