முல்லைத்தீவு மாவட்ட பட்டதாரி பயிலுனர்களுடனான விசேட கலந்துரையாடல்.

முல்லைத்தீவு மாவட்ட பட்டதாரி பயிலுனர்களாக கடமையேற்று ஒரு வருட பயிலுனர் காலப்பகுதியை நிறைவு செய்துள்ள 86 பட்டதாரி பயிலுனர்களை நிரந்தர நியமனத்தின் போது பொருத்தமான துறைகளிற்குள் உள்வாங்குதல் தொடர்பான விசேட கலந்துரையாடலானது மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் 18-12-2020 அன்று பி.ப 1.00மணிக்கு இடம்பெற்றுள்ளது.

அரச திணைக்களங்களின் நியமனங்களின் போது சில பிரிவுகளில் அதற்கென சிறப்புப்பட்டம் கொண்டிருக்க வேண்டிய துறைகள், ஏலவே பயிற்சிக்காலங்களில் கடமையாற்றிய பிரிவுகளில் பெற்றுள்ள பயிற்சிகள் மற்றும் வெற்றிடங்கள் என்பன தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதம கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர், விடயத்திற்குப் பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர், பட்டதாரி பயிலுனர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.