கேகாலை மாவட்ட செயலகத்தின் ஆதரவுடன் மனித அபிவிருத்திதாபனத்தின் விழிப்புணர்வு.

????????????????????????????????????

இக்பால் அலி
கேகாலை மாவட்ட செயலகத்தின் ஆதரவுடன் மனித அபிவிருத்திதாபனம், கேகாலை  பொலிஸார் மற்றும் பெலிகல விஹராதிபதி ஸ்ரீசோபன தேரர் ஆகியோர்களது ஏற்பாட்டில் கொவிட் 19 கொரோனாதொற்றில் இருந்து மக்களை வருமுன் காப்போம்  எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு சுவரொட்டிகள்,துண்டுப்பிரசும் விநியோகம் ஒலிபெருக்கி அறிவுறுத்தல் ஊர்வலம்   முதலிய செயற் திட்டம் கேகாலை நகரில்  இடம்பெற்றது.
மனிதஅபிவிருத்திதாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்பி. பி. சிவப்பிரகாசம் தலைமையில் இடம்பெற்றவிழிப்புணர்வு செயற்திட்ட ஆரம்ப நிகழ்வில் கேகாலை மாவட்ட செயலாளர்  மஹிந்த எஸ். வீரசூரிய, உதவி மாவட்ட செயலாளர்  இஞ்ஞானி ரத்னசேகர புதிதாக நியமனம் பெற்ற பட்டதாரிகள் உள்ளிட்டமுக்கியபிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
கேகாலை மாவட்ட செயலகத்தில்  ஆரம்பிக்கப்பட்ட விழிப்புணர்வு செயற் திட்டம் மாவட்ட செயலக வீதி, கேகாலை  பிரதான வீதி பொதுச் சந்தை ,   பஸ்தரிப்பு நிலையம். புறநகரங்கள் மக்கள் கூடும் பொது இடங்களில்  விழிப்புணர்வு முன்னெடுக்கப்பட்டன.
பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள்,மற்றும் கொரோனா தொடர்பான தகவல்கள் உள்ளடங்கியதுண்டுப் பிரசுரங்கள் சுவரொட்டிகள் ஒலிபெருக்கி அறிவுறத்தல்கள் சிங்கள தமிழ் மொழிகளில் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

????????????????????????????????????