அட்டாளைச்சேனை பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு பீ.சீ.ஆர் பரிசோதனைகள்.

பைஷல் இஸ்மாயில்
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களில் 25 பேருக்கான Antigan பரிசோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டதில் அதில் யாருக்கும் கொவிட் 19 தொற்று இல்லையென
அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.அகிலன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
இன்னும் 25 உத்தியோகத்தர்களுக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அதனை அனுப்பி வைத்துள்ளோம். அதன் முடிவுகள் பின்னர் அறிவிக்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு தொற்றா நோய் தொடர்பான பரிசோதனைகள் (சீனி, கொலஸ்ரோல், பிரேசர்) மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கான வைத்திய ஆலோசனைகளும் வழங்கி வைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உங்களையும், உங்கள் குடும்பத்தவர்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்து செயற்படுவதன் மூலம் எமது பிரதேசத்தில் கொரோனா வைரஸ் பரவலை முற்றாக அளிக்க முடியும் எனவும் இதற்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும் டாக்டர் எஸ்.அகிலன் கேட்டுக்கொண்டார்.