கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை விசேட கலந்துரையாடல்

(ஏ.எல்.எம். ஷினாஸ்
கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை விடயங்களை உள்ளடக்கியதான  விசேட கலந்துரையாடல் இன்று (19) பிரதேச செயலாளர் ரி.ஜெ.அதிசயராஜ் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இக் கூட்டத்தில் கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் .ஆர்.கணேஸ்வரன், கல்முனை வடக்கு வைத்தியசாலை வைத்தியதிகாரி டாக்டர்.என்.ரமேஸ், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது Covid 19 நோய்த் தாக்கத்திலிருந்து பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள 29 கிராமசேவையாளர் பிரிவுகளிலும் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.