அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு “பேஸ் சீல்ட்” வழங்கி வைக்கும் நிகழ்

 பைஷல் இஸ்மாயில் –
அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பத்திரிகை வாயிலாக கொண்டு வருவதற்கு களத்தில் நின்று செய்திகளை சேகரித்து மக்களுக்கு வழங்கி வருகின்ற அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு “பேஸ் சீல்ட்” வழங்கி வைக்கும் முதற்கட்ட நிகழ்வு (18) நிந்தவூர் தொற்றா நோய் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையில் இடம்பெற்றது.
இந்த “பேஸ் சீல்ட்” இனை குறித்த வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கே.எல்.எம்.நக்பரினால் வழங்கி வைக்கப்பட்டது.
இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் இருக்கும் ஊடகவியலாளர்களுக்கு சுவதாரணி மருந்துப் பொதியும் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.