கல்முனை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசம் உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கம்

(சர்ஜுன் லாபீர், பாறுக் ஷிஹான்)
கல்முனை ஸாஹிராக் கல்லூரி வீதி தொடக்கம் ரெஸ்ட் ஹவுஸ் வீதி வரையான பிரதேசங்களில் இன்று காலை 6.00 மணி தொடக்கம் நடைமுறையிலுள்ள தனிமைப்படுத்தல் ஒழுங்கு இன்று மாலை 5.30 மணியுடன் தளர்த்தப்படுகிறது.

இன்று வெள்ளிக்கிழமை 150 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட ரெபிட் அன்டிஜென் பரிசோதனையில் 04 பேருக்கு மாத்திரமே தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதையடுத்து, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் கல்முனை தெற்கு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோரின் ஆலோசனையின் பேரில் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களினால் மேற்படி பிரதேசங்களுக்கான தனிமைப்படுத்தல் இன்று மாலை 5.30 மணியுடன் தளர்த்தப்படுகிறது என அறிவித்துள்ளார்.