திருமலையில் இறைச்சிக்கடையில் பணிபுரியும் ஊழியருக்கு கொரனா தொற்று.

Corona virus test kit - Swab sample for PCR DNA testing
(கிண்ணியா_)
திருகோணமலை நகர சபை பிரிவிற்கு உட்பட்ட மின்சார நிலைய வீதியில் அமைந்துள்ள நகர சபைக்கு சொந்தமான மாட்டிறைச்சிக்கடையில் பணிபரியும் ஊழியர் ஒருவருக்கு கோரோனா உறுதியானதை அடுத்து இறைச்சிக்கடை மூடப்பட்டதுடன் அதனை அண்டி உள்ள ஆட்டிறைச்சிக்கடை,கோழியிறைச்சிக்கடை ஆகியன மூடப்பட்டதுடன் தொற்று உறுதியான ஊழியரும் அவரின் குடும்ப உறுப்பினர்களான இரண்டு வயது குழந்தை உட்பட மூன்று நபர்களுக்கும் இன்று (18)மதியம் திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் பி.சி ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும்  தொற்று உறுதியான திருகோணமலை ஜமாலியா பிரதேசவாசியான மாட்டிறைச்சிக்கடை ஊழியர் தனிமைபடுத்தல் மத்திய நிலையத்திற்கு அனுப்பிவைக்கபடுவதற்கான நடவடிக்கைகளில் சுகாதார வைத்திய அதிகாரிகள் ஈடுபடுகின்றனர்