கந்தளாய் சூரியபுர விமான விபத்தில்  விமானியும் சாவு.

பொன்ஆனந்தம்

திருகோணமலை  கந்தளாய் சூரியபுர விமான விபத்தில்  விமானி பலியாகியுள்ளதாக விமானப்படை அறிவித்துள்ளது.
பயிற்சிவிமானமும் முற்றாக சேதமாகியுள்ளது.
விபத்தில் பலியான விமானி கேகாலை மாவட்டத்தைச்சார்ந்த சாலிந்த அமரக்கோன் வயது 23, எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்.2019இல் பணியில் இணைந்துள்ளார்

விமானத்தின் பகுதிகளை மீட்கும் பணியில் விமானப்படையினர் ஈடுபட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிசாரும் விமானப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்