மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் விடுதி மீதான தாக்குதல் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கண்டன போராட்டம்

சண்முகம் தவசீலன்

மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் விடுதி மீது இனம் தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாந்தை கிழக்கு   பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் இன்று காலை  கண்டன போராட்டத்தில்  ஈடுபட்டிருந்தனர்

கடந்த 10.12.2020 அன்று மாந்தை கிழக்கு பிரதேச செயலரின் உத்தியோக தங்குமிட விடுதி மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் மேற்கொண்ட  தாக்குதலை கண்டித்தே குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை  இடம்பெற்றிருந்தது

“அரச அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்து” “பறிக்காதே பறிக்காதே அரச ஊழியர்களின் பாதுகாப்பை பறிக்காதே””நினைக்காதே நினைக்காதே கல்லெறிந்து காரியம் சாதிக்க நினைக்காதே” போன்ற  வாசகங்கள் எழுதப்பட்ட  பதாதைகளை தாங்கியவாறு  எதிர்ப்பு  நடவடிக்கையில்  ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்

இதே வேளை குறித்த  பிரதேச செயலகத்தில் வெளிமாவட்டத்தினை சேர்ந்த அதிகளவான ஊழியர்களே தங்கி நின்று  கடமையாற்றும் நிலையில் தங்குமிட விடுதி மீதான தாக்குதல்  அச்ச உணர்வை  ஊழியர்கள்   மத்தியில்  ஏற்படுத்தி உள்ளதாகவும்,  தெரிவிக்கின்றனர்