கிழக்கில் கடந்த 12 மணித்தியாலயத்தில் புதிதாக 21 பேருக்கு தொற்று

கண்டறியப்பட்டதையடுத்து அக்கரைப்பற்று சந்தை கொத்தணி 400 தாண்டியதையடுத்து கிழக்கில் 588 ஆக அதிகரிப்பு
(கனகராசா சரவணன்)
அக்கரைப்பற்று சந்தை கொத்தணி ஊடாக கொரோனா தொற்றுக்கள்ளானவர்கள் நேற்று திங்கட்கிழமை இரவு 11.48 மணிவரையிலான 12 மணித்தியாலயத்தில்  பிசிஆர் பரிசோதனை மூலம் புதிதாக 21 பேருக்கு தொற்று கண்டறியப்படட்தையடுத்து அக்கரைப்பற்று சந்தை கொத்தணி 411 ஆக அதிகரித்துள்ளதுடன் கிழக்கில் 588 ஆக அதிகரித்துள்ளது

கிழக்கு மாகாண சுகாதார திணைக்கள கொரோனா பிரிவின் நேற்று திங்கட்கிழமை இரவு 11.48 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் பிரகாரம். மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட கொரோனா கொத்தனியையடுத்து. அக்கரைப்பற்று சந்தை கொத்தணியில் இருந்து நேற்று திங்கட்கிழமை இரவு 11.48 மணிவரையிலான 12 மணித்தியாலயத்தில்
காரைதீவில் ஒருவரும், நிந்தவூரில் ஒருவரும், சாய்ந்தமருதில் ஒருவரும், அட்டாளைச்சேனையில் ஒருவரும், பொத்துவில் 12 பேரும் சம்மாந்துறையில் 3 பேரும், இறக்காமத்தில் 2 பேருமாக 21 பேர் புதிதாக கண்டறியப்பட்டுள்ளனர் .
கிழக்கு மாகாணத்தில்; 4 சுகாதார பிராந்தியங்களான மட்டக்களப்பு சுகாதார பிராந்தியத்தில் 98 பேருக்கும், திருகோணமலை சுகாதார பிராந்தியத்தில் 18 பேருக்கும், அம்பாறை மாவட்டத்தில் அம்பாரை சுகாதார பிராந்தியத்தில்  20 பேரும்; கல்முனை சுகாதார பிரிவில் 452 பேருமாக  588 போருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது
இதேவேளை கடந்த 24 மணித்தியாலயத்தில் கிழக்கு மாகாணத்தில் 21629 பேருக்கு பிசிஆர் மற்றும் அன்ரெயன். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்  அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள அக்கரைப்பற்று. ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை ஆகிய 3 பிரதேச செயலகப்பிரிவுகளும் மற்றும் மாளிகைக்கடு கிழக்கு  தனிமைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.