ரீ.எல்.ஜவ்பர்கான்- க.சரவணன்
மட்டக்களபபு கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பில் இன்று(15) காலை 9 மணியளவில் இடம்பெற்ற பாரிய வீதி விபத்துச் சம்பவமொன்றில் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதாக பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிசார் தெரிவித்தனர்.
புதுக்குடியிருப்பு பிரதான வீதி சந்தியில் இவ் விபத்து இடமபெற்றுள்ளது.
கல்முனை நோக்கி வந்த காரும் மட்டக்களப்பு நோக்கிவந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த செங்கலடி பங்குடாவெளியைச் சேர்ந்த 30 வயதுடைய தங்கராசா ஜெர்சன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .இறந் தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.காரை செலுத்தியவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.