நாளையதினம் கொழும்பின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பின் கிரான்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிறிசந்த செவண குடியிருப்பு தொகுதி மற்றும் சிறிமுத்து உயன குடியிருப்பு தொகுதி ஆகியன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.
மேலும், மாளிகாவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லக்ஹிரு செவண ரயில் வீடமைப்பு திட்டம் மற்றும் பொரளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிறிசர உயன ஆகியன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன