மட்டு.கல்லடி பொதுச்சந்தையில் 95 பேரிடம் அன்டிஜன் கொரோனா பரிசோதனை

ஒருவருக்கும் தொற்று இல்லை

ரீ.எல்.ஜவ்பர்கான்–மட்டக்களப்பு  நிருபர்
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட கல்லடி பொதுச் சந்தையில் வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் வியாபாரிகள் மற்றும் தனிப்படுத்தப்பட்டுள்ளோரின் குடும்ப உறவினர்கள் 95 பேரிடம் இன்று அன்டிஜன் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக கல்லடி பிரதேச பொது சுபாதார பரிசோதகர் எஸ்.அமிர்தாப் தெரிவித்தார்.

கல்லடி பொது சந்தைக்கட்டிடத்தில் இப்பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.இதன்போது கல்லடி பொது சுகாதார பரிசோதகர் எஸ்.அமிர்தாப் நாவற்குடா பொது சுகாதார பரிசோதகர் எஸ்.தீரகுமாரன் கோட்டைமுனை பொது சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் ஆகியோர் அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.