மாணவர்களின் கல்வியை பாதுகாக்குமாறு கோரி பாரிய போராட்டம்

கல்வி அமைச்சுக்கு முன்பதாக மாணவர்களின் கல்வியை பாதுகாக்குமாறு கோரி பாரிய போராட்டம் ஒன்றை நேற்று நடத்தியதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் .
மாணவர்களின் கல்வி பாதிப்பிற்கு உடன் தீர்வைப்
பெற்றுக் கொடு!

அனைத்து மாணவர்களுக்கும் இணைய வழி கல்வியை இலவசமாக பெற்றுக் கொடு!

மாணவர்களின் கல்விக்கான இலத்திரனியல் ஊடகத்தின் சந்தர்ப்பத்தினை அதிகரிக்கச் செய்!
போன்ற காரணங்களை முன்வைத்து மக்கள் விடுதலை முன்னணி  கல்வி அமைச்சுக்கு முன்பாக பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது. இப்போராட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க அவர்களும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் மஹிந்த ஜெயசிங்க அவர்களும் தலைமை தாங்கி போராட்டத்தை வழி நடத்திச் சென்றார்கள் எனவும் தெரிவித்தார்.