முல்லைத்தீவு கடலோரத்தில் 50 ற்கும் மேற்பட்ட இராணுவ கடற்படை முகாம்கள் இருந்தும்   இந்திய மீனவர்களைத் தடுக்க  முன்வரவில்லை –

முல்லை மீனவர்கள்

(சண்முகம் தவசீலன்)

முல்லைத்தீவு கடற்பரப்பில் அண்மைய நாட்களாக இடம்பெறும் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பாக விசேட அவசர கூட்டம் ஒன்று நேற்று (10) மாலை கள்ளப்பாடு கிராமத்தில் இடம்பெற்றது .

இதில் மீன்பிடி சங்கங்களின் பிரதிநிதிகள் மீனவர்கள், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர் இதன்போது மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது மீனவர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர் பல தடவைகள் இந்திய மீனவர்களின் தொல்லைகள் குறித்து அறிவிக்கப்பட்ட போதிலும் இதுவரையில் காத்திரமான நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்

அத்துடன் முல்லைத்தீவின் கரையோரப் பகுதிகளில் நிலைகொண்டுள்ள கடற்படையினர் இந்திய மீனவர்களை அவதானித்து வருவதுடன் அவற்றை  தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.

இந்தநிலையில் தாமாகவே  கடலுக்குச் சென்று தென் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையை முன்னெடுக்க இருப்பதாகவும் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.