காணாமல் போனோர் தொடர்பாக வழங்கப்பட்ட இடைக்கால உதவித்தொகையானது மன்னாருக்கு வழங்கப்படவில்லை.

( வாஸ் கூஞ்ஞ)

காணாமல் போனோர் தொடர்பாக வழங்கப்படவிருந்த இடைக்கால உதவித்தொகையானது யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் மன்னார் மாவட்டத்திலும் ஏனைய மாவட்டங்களிலும் அது வழங்கப்படவில்லை. கடந்த இலங்கை அரசாங்கமானது காணாமல் போனோர் தொடர்பாக வழங்கப்படவிருந்த இடைக்கால உதவித்தொகைக்கென பாராளுமன்றத்தில் ஒரு குறித்த தொகை ஒதுக்கீட்டினை பாதீட்டில் முன்வைத்திருந்தது. ஆனால் தற்போதைய  அரசாங்கமானது இம்முறை பாராளுமன்றத்தில் முன்வைத்த பாதீட்டில் காணாமல் போனோர் தொடர்பான இடைக்கால உதவித்தொகை குறித்தோ நல்லிணக்க பொறிமுறைகள் குறித்தோ எவற்றையும் உள்ளடக்கவில்லை யென மன்னார் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சர்வதேச மனிதஉரிமைகள் தினத்தை முன்னிட்டு மன்னாரில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு நிகழ்வு மன்னார் நகரில் வியாழக் கிழமை (10.12.2020) இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ் நிகழ்வானது மன்னார் ரெலிக்கொம் நாற்சந்தியிலிருந்து பறப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் அமைந்துள்ள இடத்தினூடாக மன்னார் மாவட்ட செயலகத்தின் முன்பாக இவ் கவனயீர்ப்பில் கலந்து கொண்டவர்கள் பதாதைகள் ஏந்தியவர்களாக காணப்பட்டனர்.மன்னாரில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் இவ் கவனயீர்ப்பு நிகழ்வில் அருட்பணியாளர் எஸ்.nஐயபாலன் குரூஸ் அடிகளாரும் கலந்து கொண்டார்.

குறித்தஇவ் போராட்டத்தில் பல வருடங்களாக தமது பிள்ளைகளின் நீதிக்காக போராடும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவுகள் இணைந்து தமது பிள்ளைகளின் நீதிக்கான போராட்டத்தில் இதுவரை இலங்கை அரசாங்கம் எந்தவெரு பதிலினையும் தராத நிலையில் தொடர்ந்தும் இவ்வாறான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதையும்

தொடர்ச்சியாக கானாமல் ஆக்கப்பட்டவர்கள் மட்டில் இவ் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை என்பதை சர்வதேசத்திற்கு வலியுருத்தும் வகையில் குறித்த போராட்டம் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளத
குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் தற்போதைய உள்நாட்டு பொறிமுறையின் கீழ் உருவாக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்தினால் வழங்கப்படுகின்ற சான்றிதழ் எவ்வாறு அரச கட்டமைப்புக்களால் நிராகரிக்கப்படுவதையும் இவ் அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் நேர்மையாக செயற்படவில்லை என்பதை சர்வதேசத்திற்கு வலியுருத்தும் வகையில் ஊடக அறிக்கையும் வெளியிடப்பட்டதுதொடர்ந்து இவ் கவனயீர்ப்பு போராட்டத்தின்போது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது கடந்த 1983 2009 வரையான காலப்பகுதியில் இலங்கையில் ஏற்பட்ட கடும் போரின் நிமித்தம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகமான நபர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள்

இவ்வாறு நாடுகளில் ஏற்படும் யுத்தம் காரணமாகவும்இ வன்முறைச் செயற்பாடுகள் காரணமாகவும் பலவந்தமாகக் காணாமல் போகச் செய்வதிலிருந்து எல்லா நபர்களையும் பாதுகாப்பதற்கான பிரகடனமானது 1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் திகதி ஐ.நா பொதுச்சபையின் தீர்மானம் இல – 41/33 ஆல் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இருப்பினும் எமது நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக அதிகமான நபர்கள் காணாமல் ஆக்கப்பட்டிருந்தமை போர்க்காலங்களில் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருந்தது. மேலும்இ போர் முடிவுக்கு வந்த பின்இ கடந்த காலங்களில் இருந்த இலங்கை அரசாங்கமானது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா சபையின் 30ஃ1 தீர்மானத்திற்கு இணங்கியிருந்தும் காணாமல் ஆக்கப்பட்ட நபர்களுடைய குடும்பங்களுக்கான சரியான தீர்வினை இதுவரை வழங்கவில்லை.
நிலைமாறுகால நீதிப்பொறிமுறையின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம்இ காணாமல் போன உறவுகளுடைய குடும்பங்களுக்கு சரியான நீதியினைப் பெற்றுத்தரக் கூடியவைகளாக  இதுவரை இல்லை.
2016ம் ஆண்டின் 14ம் இலக்கச் சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் வெறுமனே பெயரளவிலான ஓர் அலுவலகமாக மாத்திரமே காணப்படுகின்றது.

அதனடிப்படையில் குறித்த காணாமல் போன நபர் ஒருவரின் பெயரில் காணப்பட்ட சொத்துக்களை சம்மந்தப்பட்ட அவர்களுடைய உறவினர்கள் பெற்றுக்கொள்வதற்கு அரசினால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணமான காணப்படாமைக்கான சான்றிதழினைப்பயன்படுத்தி அவற்றைப் பெறமுடியும் எனக்கூறப்பட்டிருந்தும் இன்றுவரை அது நடைமுறைக்கு வரவில்லை என்பது எமது களப்பணியின் போது தெளிவாகியது.
2010ம் ஆண்டின் 19ம் இலக்க இறப்புக்களினதும் காணாமல் போன ஆட்களினதும் பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் 8து(2)ம் பிரிவின் கீழ் வழங்கப்படும் இக்காணப்படாமைக்கான சான்றிதழினை சகல அரச திணைக்களங்களையும் அரச நிறுவனங்களையும் ஏற்றுக்கொள்ளும்படி காணப்படாமைக்கான சான்றிதழின் பின் பகுதியின் அடிப்பகுதியில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தும்இ அது முற்றுமுழுதாக நடைமுறையில் இல்லை
மேலும் காணாமல் போனோர் தொடர்பாக வழங்கப்படவிருந்த இடைக்கால உதவித்தொகையானது யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் மன்னார் மாவட்டத்திலும் ஏனைய மாவட்டங்களிலும் அது வழங்கப்படவில்லை. கடந்த இலங்கை அரசாங்கமானது காணாமல் போனோர் தொடர்பாக வழங்கப்படவிருந்த இடைக்கால உதவித்தொகைக்கென பாராளுமன்றத்தில் ஒரு குறித்த தொகை ஒதுக்கீட்டினை பாதீட்டில் முன்வைத்திருந்தது. ஆனால் தற்போதைய  அரசாங்கமானது இம்முறை பாராளுமன்றத்தில் முன்வைத்த பாதீட்டில் காணாமல் போனோர் தொடர்பான இடைக்கால உதவித்தொகை குறித்தோ நல்லிணக்க பொறிமுறைகள் குறித்தோ எவற்றையும் உள்ளடக்கவில்லை .
ஆகவேஇ  எமது உறவுகள் தொடர்பாகஇ தற்போதைய இலங்கை அரசாங்கமானது கவனஞ்செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஓர் விடயமாகும். 11 ஆண்டுகளாக பல போராட்டங்களை வடக்கு கிழக்கு மக்கள் செய்துவரும் நிலையில்   இதுவரை இலங்கை அரசாங்கமானது காணாமல் போன நபர்கள் குறித்தும் அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்பது குறித்தும் அல்லது அவர்கள் இருக்கின்றார்களா? அல்லது இல்லையா? என்பது குறித்தும் தகவல் எதுவும் வெளியிடாமல் உள்ளதும் அவர்களுக்கான உரிய நீதி கிடைக்காமையை உறுதிப்படுத்துகின்றது.
நிலைமாறுகால நீதி தொடர்பான சட்டங்களை அமுல்படுத்தியும் அதன் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட நிறுவனக்கட்டமைப்புக்களாலும் எவ்விதப் பலனும் ஏற்படாமை குறித்து காணாமல் ஆக்கப்பட்ட நபர்களுடைய குடும்பங்கள் அதற்கெதிராக கண்டனம் தெரிவிக்கின்றனர்.
மேலும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலையிலும் பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கான நீதி வேண்டி மனித உரிமைகள் தினமாகிய இன்றும் இப்போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றவேளை இதுவரை எந்தவொரு உள்நாட்டு பொறிமுறைககளும் எமக்கு திருப்தியளிக்கவில்லை என்பதை சர்வதேசத்திற்கு வலியுருத்தும் வகையிலே இப்போராட்டம் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது என மன்னார் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையம் இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.