மெதடிஸ்ட் ஆலயத்தினால் கொவிட் தடுப்பு பதாதைகள் அன்பளிப்பு.

(எம்.ஏ.றமீஸ்)
கொவிட்-19 தொற்றிலிருந்து பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயப் பிரிவில் உள்ள மக்களைப் பாதுகாக்கும் வகையில் பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கொவிட் தடுப்பு வேலைத் திட்டத்திற்கு மத நிறுவனங்கள், பொது நல அமைப்புக்கள் போன்றன பல்வேறான ஒத்துழைப்புக்களை வழங்கின வருகின்றன.
இவ்வேலைத் திட்டத்திற்கமைவாக, கொவிட்-19 தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் ஒரு தொகை விழிப்புணர்வு பதாதைகள் கோமாரி மெதடிஸ்ட் ஆலயத்தினால் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.
பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு இவ் விழிப்புணர்வு பதாதைகளை வழங்கி வைக்கும் நிகழ்வுவும் ஆலய நிருவாகத்தினருக்கு சுகாதாரத் துறையினரால் நன்றி தெரிவிக்கும் நிகழ்வும் கோமாரி மெதடிஸ்ட் தேவாலயத்தில் இடம்பெற்றது.
அருட்தந்தை கே.எம்.றெஜனினோல்ட் எஸ்பரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது பொத்துவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.யு.அப்துல் சமட்; தலைமையிலான சுகாதாரத் துறையினர் கலந்து கொண்டனர். இதன்போது விழிப்புணர்வுப் பதாதைகள் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியிடம் வழங்கி வைக்கப்பட்டதுடன், சுகாதாரத் துறையினரால் ஆலய நிருவாகத்தினருக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டது.
தேவாலயத்தின் மூலம் வழங்கப்பட்ட இவ்விழிப்புணர்வு பதாதைகள் பொத்துவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகள் பலவற்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மத நிறுவனங்களை அண்டிய பிரதேசங்கள், பொதுச்சந்தை, பாடசாலைகள் அண்மித்த பகுதிகள் மற்றும் மக்கள் நடமாடும் பிரதேசங்கள் போன்றவற்றில் இப்பதாதைகள் சுகாதாரத் துறையினரால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.