சது ஸ்ரார் உற்பத்தி விற்பனை நிலையம் திறந்து வைப்பு  

(சண்முகம் தவசீலன்)

பெண்தலைமைத்துவ குடும்பமாக இருந்தும் பலருக்கு முன்னுதாரணமாக சாதித்து  காட்டும் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியில் வசித்துவரும் சாயிராணி அவர்களின் சது ஸ்ரார் உற்பத்தி விற்பனை நிலையத்தை  முல்லைத்தீவு மற்றும் மற்றும் கிளிநொச்சி அரசாங்க அதிபர்கள் இணைந்து திறந்து வைத்துள்ளனர்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு 10ம் வட்டாரம் பகுதியில் சிறுதொழில் முயற்சியாக தன்னுடைய தொழில் முயற்சியை ஆரம்பித்து பின்பு பல்வேறு முன்னேற்றத்தை அடைந்து தனது உற்பத்திகளுக்கு இலங்கையில் மட்டுமல்லாது சர்வதேச ரீதியிலும் ஒரு அங்கீகாரத்தை பெற்றதோடு பலராலும் பாராட்டப்பட்டு பல விருதுகளையும் பெற்று இருந்த முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு  சது ஸ்ரார் உரிமையாளர் சாயிராணி  அவர்கள் தன்னுடைய அயராத முயற்சியின் பயனாக முல்லைத்தீவு பரந்தன் வீதியில் சுமார் ஒரு கோடிக்கு மேற்பட்டமுதலீட்டில்  உற்பத்தி சாலையையும் விற்பனை நிலையத்தையும் அமைத்திருந்தார்

இவ்வாறு அமைக்கப்பட்ட புதிய கட்டிடத்தினை  முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க. விமலநாதன் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோர் இணைந்து குறித்த கட்டிடத்தினை நேற்று (09) நாடாவை வெட்டி  இந்த  திறந்து வைத்தனர்

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த இந்த பெண்ணினுடைய முயற்சியை பலரும் பாராட்டி வருவதோடு இந்த திறப்பு விழா நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் தொழில்துறை திணைக்களத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு அரச அதிகாரிகள் பொதுமக்கள் இணைந்து கொண்டிருந்தனர்

சிறிய  ஒரு தொழில் முயற்சியாக ஆரம்பித்து இன்று ஒரு பாரிய தொழிற்சாலையாக முயற்சி எடுத்தது  மாத்திரமல்லாமல் தன்னுடைய அயராத முயற்சியின் பயனாக சுமார் 10க்கும் மேற்பட்ட பெண் தலைமைத்துவ மற்றும் மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கும் தனது தொழிற்சாலையில் வேலை வாய்ப்பை வழங்கியுள்ளார் இவ்வாறான ஒரு நிலைக்கு வந்துள்ள இந்த பெண்ணின் சாதனைகளை பலரும் பாராட்டியதோடு அவர் எதிர்காலத்திலும் பல்வேறு சாதனைகளை படைக்க வேண்டும் எனவும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்