சேருவில அல்லை கந்தளாய் பிரதான வீதி உடைந்து பள்ளமும் படுகுழி நிறைந்து காணப்படுகின்றது,புனரமைத்து தருமாறு கோரிக்கை.

(எப்.முபாரக்)

திருகோணமலை மாவட்டத்தின் சேருவில அல்லை கந்தளாய் பிரதான வீதி உடைந்து பள்ளமும் படுகுழி நிறைந்து காணப்படுகின்றது.
இம்மாவட்டத்தின் சேருவில பௌத்த வணக்கஸ்தலம் மற்றும் மூதூர் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் அல்லை கந்தளாய் பிரதான வீதியானது இடைக்கிடை துண்டு துண்டாக வீதி உடைந்து காணப்படுவதால் தூரப்பிரயாணம் மேற்கொள்ளும் வாகன சாரதிகள் மற்றும் பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.
இவ்பிரதான வீதியானது நாட்டில் யுத்தம் நிறைவு பெற்றதன் பின்னர் அமைக்கப்பட்ட காபெட் வீதியாகும் தற்போது இவ்வீதி காபெட் வீதியாக இருந்தமைக்கான எந்த அடையாளங்களுமின்றி நூறு மீற்றருக்கு போக்குவரத்துக்கள் செய்ய முடியாத நிலையில் காணப்படுகின்றது.
பாரத்துடன் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அச்சத்துடன் செல்லுவதாக தெரிவிக்கின்றனர்.
மழை காலங்களில் பள்ளத்தினுள் மூன்றடிக்கு மேல் மழை நீர் தேங்கி நிற்பதாகவும் இதனால் பயணிகள் மூதூரிலிருந்து கொழும்பு செல்லும் பிரயாணிகள் பஸ்கள் சிரமங்களுக்குள்ளாகின்றனர்.
இவ்வீதியை பொது மக்களின் நலன் கந்தளாய் பிராந்திய வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் புனரமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.