திருமலையில் களவாடப்பட்ட அம்மன் சிலை மீண்டும் கிடைத்தது.

பொன்ஆனந்தம்

திருகோணமலை சேருவில  பிரிவில் அண்மையில் களவாடப்பட்ட அம்மன் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

 மேற்படி சிலை ஆலயத்தின் கூரையை பிரித்து களவாடப்பட்டிருந்ததாக ஆலய நிர்வாகத்தினர் முறையிட்டிருந்தனர்

இந்நிலையில்  நேற்று காலை குறித்த சிலை தங்கநகர் வயலருகில் உள்ள நீர்பாயும் வாய்காலுக்கருகில் போடப்பட்டருந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. என நிருவாம் தெரிவித்தது.

இந்த சிலையானது தங்கநகர் நாகபூசணி அம்மன் ஆலய புற்றில் புதைந்து கிடந்த நிலையில் கடந்த வருடம் கண்டெடுக்கப்பட்டதாகும் இதனால் இது பூர்வீகமானது என்பதுடன் பெறுமதியான எனவும் ஆலய நிர்வாகம் குறிப்பிட்டிருந்தது. இச்சிலை விவகாரம் இப்பிரதேசத்திற்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலதிக விசாரணைகள் தொடர் கின்றன.

கண்டெடுக்கப்பட்ட சிலையின் சிறிய சேதம் ஏற்படுத்தப்பட்டருப்பதுடன் மேலதிக விசாரணைகளை சேருவில பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.