திருக்கோவில் பிரதேசத்தில் தனிமைப்படுத்திய 148 குடும்பங்களுக்கு அரசினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

(திருக்கோவில்  நிருபர்-எஸ்.கார்த்திகேசு)

அம்பாரற திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராம சேவையாளர்கள் பிரிவுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 148 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் திருக்கோவில் பிரதேச செயலகத்தினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல். பண்டாரநாயக்காவின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்தினின் தலைமையிலான குழுவினர்; தனிமைப்படுத்தப்பட்ட ஒரு குடும்பத்திற்கு தலா 10ஆயிரும் ருபா பெருமதியான உலர் உணவுப் பொருட்களை விநியோகித்து வருகின்றனர்.

இந்நிலையில் திருக்கோவில் பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான வர்த்தகர்கள் மற்றம் அந்த வர்த்தகர்களிடம் பொருள் கொள்வனவு மேற்கொண்டவர்கள் மற்றும் உறவினர்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வீடு திரும்பியவர்கள் என்ற அடிப்படையில் திருக்கோவில் பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்ட சுமார் 148 குடும்பங்களுக்கு இவ்வாறு உலர் உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகளை திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கிராம சேவை உத்தியோகத்தர்கள் ஆகியோர் வீடு வீடாச் சென்று பொதிகளை வழங்கி வருகின்றனர்.