9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

(க.கிஷாந்தன்)

நுவரெலியா மாவட்டத்தில் லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகளில் மேலும் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

அக்கரப்பத்தனை பகுதிகளில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு பிசிஆர் பரிசோதனைமூலம் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றாளர் ஒருவருடன்

தொடர்பில் இருந்த தந்தை, தாய் மற்றும் மகள் ஆகியோருக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி அக்கரபத்தனை தோட்டப்பகுதியில் அறுவருக்கும், கிரேட் வெஸ்டன் தோட்டத்தில் ஒருவருக்கும், லிந்துலை தோட்டத்தில் இருவருக்கும் பிசிஅர் பரிசோதனை மூலம் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும், குடும்ப உறுப்பினர்களும் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டுசெல்லப்படவுள்ளனர்.

தீபாவளி பண்டிகைக்காக உறவினர்கள் வீடுகளுக்கு சென்றவர்களுக்கும், மரண வீடுகளுக்கு சென்றவர்களுக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.