வடகிழக்கு பருவமழை

smart
(பொன்ஆனந்தம்)
வட கிழக்குப்பருவ மழைக்காலம் ஆரம்பித்துள்ளது. வடக்கில் இதன்பலாபலனை மக்கள்  தற்சமயம் அனுபவிக்கின்றனர். இதன் பாதிப்பு பரவலாக வரலாம் அவ்வாறு வரும் சூழலில்  பாதிக்கப்படும் மக்களைப்பராமரிக்க அமைப்புக்கள் தயாரக வேண்டும்  என மாவட்ட  அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர்  எஸ்.சுகுணதாஸ்  வேண்டுகோள் விடுத்தார்
நேற்று திருமலை   அரசசார அமைப்புகளைச்சந்த்தித்து உரையாற்றிய போதே மேற்படி வேண்டுகோளை அவர் முன்வைத்தார்
கோவிட் 19 மற்றும் இதர அனர்த்தங்கனி;போதும் புரவி சூறாவளியின்போதும் பொது அமைப்புக்கள் செய்ய பணிக்கு பாராட்டை நான் தெரிவிக்கின்றேன்.
முhவட்டத்தில் புரவி புயல் அச்சம் ஏற்பட்டபோது பல குளுக்கள் சுயமாக எம்முடன் தொடர்புகொண்டு தாவம் பணி செய்ய தயாராக இருப்பதாக சுயமாக முன்வந்தனர்.
அது பாராட்டத்தக்க செயலாக அமைந்திருந்தது. அவ்வாறே வடகிழக்கு பரு மழைகாலம் வருவதனால் அது திருகோணமலை மாவட்ட மக்களை பெரிதும் பாதிப்பது வழமை. இவ்வாறான சூழலில் இம்முறை கொவிட் 19இன் பிரச்சனையும் உள்ள நிலையில் மக்களை உரிய முறையில் பாதுகாக்க வேண்டும்.
அவ்வாறாக பாதிப்பைச்சந்திக்கும் மக்களுக்கு உலர்உணவை அரசு வழங்கும் ஆனால் உணவு அல்லாத விடயங்களை தொண்டர்நிறுவனங்களே வழங்க முன்வரவேண்டும்.
அதற்கு இப்போதே நீங்கள் தயாராகவேண்டும் எனவும் தெரிவித்தார்.