இன்றைய பிந்திய தகவல்களின்படி கல்முனைப்பிராந்தியத்தில் மேலும் 14 புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.
இன்று மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளில் இரவு 10மணியளவில் கிடைத்த தகவல்களின்படி புதிதாக அக்கரைப்பற்றில் மேலும் 11பேருக்கும், ஆலையடிவேம்பில் 03பேருக்கும் கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இதனடிப்படையில் இன்று திங்கட்கிழமை கல்முனைப்பிராந்தியத்தில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது.
இதனடிப்படையில் பிராந்தியத்தில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 290 என தெரிவிக்கப்படுகின்றது.
இதனடிப்படையில் அக்கரைப்பற்றில் இன்று திங்கட்கிழமை தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது.