உத்தியோகத்தர்கள் பெயர்ப் பலகை விநியோகம்

(சர்ஜுன் லாபீர்)

உற்பத்தித் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் நலனோம்பல் அமைப்பினால் அங்கு கடமை புரியும் சகல உத்தியோகத்தர்களுக்குமான பெயர்ப் பலகை வழங்கும் நிகழ்வு இன்று(7) கல்முனை பிரதேச செயலக கணக்காளரும்,நலனோம்பல் அமைப்பின் பிரதித் தலைவருமான வை.ஹபிபுல்லா தலைமையில் நடைபெற்றது.

பிரதேச செயலாளர் நஸீர்,உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம் றம்சான்,கிராம நிர்வாக சேவை உத்தியோகத்தர்.யூ.எல்.பதுருத்தின் ஆகியோருக்கு உத்தியோகபூர்வமாக பெயர்ப் பலகைகள் வழங்கி வைக்கப்பட்டது.