YUKன் கொரோனா விழிப்புணர்வும், பொது நூலகத்திற்கு புத்தகம் சேகரித்தலும்.

(எருவில் துசி) அதிகரித்துவரும் கொரோனா தாக்கத்தில் இருந்து மக்களை தற்காத்துக்கொள்ளும் நோக்கிலும்,எருவில் இளைஞர் கழக பொது நூலகத்திற்கு புத்தகங்கள் சேகரிக்கும் பணியும் இன்று(04) மேற்க்கொள்ளப்பட்டது.

எருவில் இளைஞர் கழகத்தினால் நிர்வகிக்கப்படுகின்ற பொது நூலகமானது வாசகர்களின் மனம்கவர்ந்த புத்தகம் இன்மையினால் வாசகர்கள் பல புத்தகங்கள் தேவை என அங்கலாயித்தமைக்கு அமைவாக பல தொண்டர்
அமைப்புக்கள் நலன் விரும்பிகள் பல ரூபா பெறுமதியான புத்தகங்களை நன்கொடையாக வழங்கி வருகின்ற போதிலும் மேலும் தரமுயர்த்தும் நோக்கில் கிராமத்தில் உள்ளவர்களின் வீடுகளுக்கு சென்று புத்தகங்கள் சேகரிக்கும்
பணியில் எருவில் இளைஞர் கழகம், கண்ணகி விளையாட்டுக் கழகம், உதயநிலாக்கலைக் கழகம் (YUK)என்பனவற்றில் ஏற்பாட்டில் இன்று நடைபெற்றது. இதன் போது பிரதானமாக தற்போது மக்களை பெரும் பீதிக்குள்ளாக்கி உலகையே
தன்பக்கம் திரும்பிபார்க்க வைத்திருக்கும் கொரோனா தாக்கத்தில் இருந்து மக்களை தற்பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில் மக்கள் எவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை உள்ளடக்கிய விழிப்புணர்வு
துண்டுப்பிரசூரங்கள் வினியோகிக்கப்பட்டு மக்களுக்கு விழிப்பூட்டப்பட்டது.

நிகழ்வில் பொது சுகாதார வைத்திய அதிகாரியின் ஆலோசனை வழங்கப்பட்டதுடன் அவர்களும் பிரண்சமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் கழகங்களின் பதவிவழி உறுப்பினர்களும் இளைஞர்களும் எருவில் தெற்கு கிராம
அபிவிருத்தி சங்க தலைவர் ஏனைய சமூக நலன்விரும்பிகள் என பலர் கலந்து கொண்டு நிகழ்வை மெருகூட்டியமை குறிப்பிடத்தக்கது.