கொரனா நோயாளிகளை ஏற்றிச்சென்ற வாகனம் பொலனறுவையில் கல்முனை பேருந்துடன் மோதி விபத்து

பொலனறுவை அசெலபுர பகுதியில் இன்று காலை இரண்டு பேருந்துகள் மோதின.

இந்த விபத்தில் நான்கு பேர் காயமடைந்ததாக பொலீசார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் இருவர் இரண்டு பேருந்துகளின் ஓட்டுநர்கள்.

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதற்காக பேருந்து  புனானை தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு சென்று கொண்டிருந்த பேருந்தும் கல்முனை கதுறுவெல பேருந்துமே விபத்துக்குள்ளாகியதாக பொலீசார் தெரிவித்தனர்.

விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் பாதிக்கப்பட்ட 23 பேர் இருந்ததாக பொலீசார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் இரண்டு கொரோனா பாதிக்கப்பட்டவர்களும் அடங்குவதாக பொலீசார் தெரிவித்தனர்.

அவர்கள் அனைவரும்  பொலனறுவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.