கல்முனைப்பிராந்தியத்தில் தனிமைப்படுத்தல் ஊடரடங்கு பிரதேசத்தில் நோய் எதிர்ப்பு பானம்

(எம்.ஏ.றமீஸ்)
கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உட்பட்டுள்ள அக்கரைப்பற்று பிரதேசத்தின் பொதுச் சந்தைப் பிரதேசத்தினை அண்டிய பகுதியில் நோய்த் தொற்று நீக்கும் நடவடிக்கைகள் மற்றும் மக்கள் மத்தியில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கைகள் போன்றன மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கமைவாக, அக்கரைப்பற்று சுதேச மருந்து உற்பத்தி நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரித்து தேகாரோக்கியத்தினை தூண்டும்  Immuno Booster  பானம் தயாரிக்கும் மூலிகை மருந்துப் பொதிகள் குறித்த பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு  இலவசமாக அவர்களது இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று விநியோகிக்கப்பட்டன.
கல்முனை பிராந்திய ஆயுர்வேத இணைப்பாளரும் நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான டொக்டர் எம்.ஏ.நபில் தலைமையில் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது அக்கரைப்பற்று மாநாகர முதல்வர் அதாஉல்லா அஹமட் சக்கி உள்ளிட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், மாநகர உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டு இந்நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கச் செய்யும் மூலிகைப் பொதிகளைக் கையளித்தனர்.
அக்கரைப்பற்று பிரதேசத்தில் அதிகரித்து வரும் கொவிட் தொற்றாளர்கள் நடமாடிய சந்தைப் பகுதி சுற்றுவட்டாரத்தில் உள்ள சுமார் 300 மேற்பட்ட குடும்பத்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பானம் தயாரிக்கும் மூலிகைப்
அம்பாறை மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கச் செய்து அவர்களை தேகாரோக்கியம் மிக்கவர்களாக ஆக்குவதுடன் நோய்த் தொற்றிலிருந்தும் மக்களை பாதுகாக்கும் முயற்சியில் இவ்வேலைத்திட்டம் தற்போது மும்மூரமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்முனைப் பிராந்திய சுதேச மருத்துவ இணைப்பாளர் எம்.ஏ.நபீல் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி ஆர்.ஸ்ரீதரின் வழிகாட்டலின் கீழ் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணனின் நெறிப்படுத்தலில் இவ்வேலைத் திட்டம் தற்போது அம்பாறை மாவட்டம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது