அட்டாளைச்சேனை சுகாதர வைத்திய அதிகாரி காரியாலயப் பிரிவில் இதுவரை 21 கொவிட் தொற்றாளர்கள்

பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன்

(எம்.ஏ.றமீஸ்)
அக்கரைப்பற்று சந்தையுடன் தொடர்பு பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் அட்டாளைச்சேனை சுகாதர வைத்திய அதிகாரி காரியாலயப் பிரிவில் இதுவரை 21 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய அதிகார எல்லைக்குட்பட்ட ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை மற்றும் தீகவாபி ஆகிய பிரதேசங்களில் தினமும் நூற்றுக்கு மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நேற்று(03) வெளியிடப்பட்ட பி.சி.ஆர் மற்றும் அன்ரிஜன் பரிசோதனைகளுக்கேற்ப புதிதாக 13 கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைவாக, அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 04 தொற்றாளர்களும், பாலமுனை பிரதேசத்தில் 04 தொற்றாளர்களும், ஒலுவில் பிரதேசத்தில் 05 தொற்றாளர்களும் புதிதாக இனம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை(30) அட்டாளைச்சேனை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட 170 பி.சி.ஆர் பரிசோதனைகளின்போது 12 தொற்றாளர்களும், அன்ரிஜன் பரிசோதனைகளின் போது ஒருவருமாக புதிதாக இப்பிரதேசத்தில் இருந்து 13 தொற்றாளர்கள் இனம்காணப்பட்டுள்ளனர்.
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் மேலும் அதிகாரிக்காமல் இருக்கும் வகையில் பல்வேறு வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், கொவிட் தொற்றுக்குள்ளானவர்கள் பாலமுனை, உள்ளிட்ட பிரதேசங்களில் உள்ள சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் மேலும் தெரிவித்தார்.