கல்முனையில் சில கடைகளுக்கு பூட்டு.

(யு.எல்.அலி ஜமாயில்)

கல்முனைப்பிராந்தியத்தில் கல்முனை மாநகர பொதுச்சந்தை பிரதேசத்தில் சந்தையை அண்டியுள்ள பகுதிகளிலுள்ள கடைகளில் முகக் கவசம் அணியாமலும் மற்றும் சுகாதார நடவடிக்கையை கடைப்பிடிக்காமலும் இருந்த வர்த்தக நிலையங்கள் சில சுகாதார பணிமனையின் அறிவுறுத்தலுக்கு அமைய இன்றிலிருந்து மறு அறிவித்தல்வரை மூடப்பட்டுள்ளது.

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி.சுகுணனின் அவர்களின் வழிகாட்டலின் கீழ் கல்முனை பிராந்திய தொற்று நோய் பிரிவுக்கு பொறுப்பு வைத்தியரான  என.ஆரிப்  மற்றும்   சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ரிஸ்னி அவர்களும்  குறிப்பிட்ட பிரதேசங்களுக்கு சென்று நிலமைகளை ஆராய்ந்துள்ளனர்.

மறுபுறமாக களத்தில் கொரனா உடனடி கண்டுபிடிப்பு பரிசோதனை Antigen test நூறு மேற்கொள்ளப்பட்டது .
அதன் முடிவுகள் அனைத்தும்  தொற்று இல்லையென  உறுதிபடுத்தப்பட்டுள்ளது.