திருகோணமலை மாவட்டத்தில் 64 வீடுகள் சிறியளவிலும் 1 வீடு முற்றாகவும் சேதம்.

பொன்ஆனந்தம்
புறவி சூறாவளியின் தாக்கம் மற்றும் அதிக மழைவீழ்ச்சி காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் 64 வீடுகள் சிறியளவிலும் 1 வீடு முற்றாகவும் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார்.
அத்துடன் தற்காலிக இடைத்தங்கல் முகாம்களில் இருந்த பொதுமக்கள் தமது வீடுகளுக்கு சென்றுள்ளதாகவும் இருப்பினும் மக்கள் தற்போதைய நிலையில் கொவிட் 19 சுகாதார நடைமுறைகளை பேணியும் டெங்கு பரவா வண்ணம் சுற்றாடலை தூய்மையாக வைத்திருப்பது அனைவரது பொறுப்பாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் கிண்ணியா பிரதேச செயலகப்பிரிவில் சிறிதளவில் சேதமடைந்த வீடுகளை பார்வையிட கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மற்றும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள ஆகியோர் நேரடியாக கள விஜயத்தை இன்று மேற்கொண்டனர்.
இதன்போது சேதமடைந்த வீடுகளின் உரிமையாளர்களுடன் சமூகமாக கலந்துரையாடியமையும் குறிப்பிடத்தக்கது