கல்முனைபிராந்தியத்தில் இன்றும் 07பேருக்கு தொற்று உறுதி.

கல்முனை  பிராந்திய சுகாதாரபணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில் இன்று நண்பகல் வரை 350 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரிகென் பரிசோதனையின்போது 07பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் லதாகரன் சற்றுமுன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இதில்06பேர் அக்கரைப்பற்றிலும் ஒருவர் அட்டாளைச்சேனையிலும் இனம் காணப்பட்டுள்ளார்.

இதன்படி இன்று வியாழக்கிழமை நண்பகல் வரை கல்முனைப்பிராந்தியத்தில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 166 ஆக உயர்ந்துள்ளது.

அக்கரைப்பற்று சந்தை ஊடாக தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 137  ஆக உயர்வடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.