திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம்

கதிரவன்
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் ஏற்கனவே திட்டமிட்டதன்படி நாளை 2020.12.04 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவர்களான  திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துக்கோரள மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுரதா யஹம்பத் ஆகியோரின் இணைத்தலைமையில் நடைபெறவுள்ளது. இதனை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார்.
சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் சுபீட்சத்தின் நோக்கு அபிவிருத்தி திட்டம் உட்பட பல விடயங்கள் ஆராயப்படவுள்ளதாக அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் அரசியல் பிரதிநிதிகள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள்,திணைக்கள தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.