கிழக்கு மாகாணத்தில் நேற்றும்புதன்கிழமை (02.12) 22 புதிய கொரனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக மாகாண சுகாதாரப்பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.
நேற்றைய புதிய தொற்றில் அக்கரைப்பற்றில் 15பேரும், சாய்ந்தமருதில் 04பேரும் ,ஆலையடிவேம்பில் ஒருவரும், திருக்கோவில் பிரதேசத்தில் ஒருவரும் உகனையில் ஒருவரும் இனம் காணப்பட்டுள்ளார்.
அக்கரைப்பற்று சந்தை உப கொத்தணியில் இதுவரை129 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இதுவரை கிழக்குமாகாணத்தில் பெலியகொட கொத்தணி ஊடாக 279பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
மாவட்ட ரீதியாக திருகோணமலை 16 , மட்டக்களப்பு 92, அம்பாறை பிராந்தியம் 12, கல்முனைபிராந்தியம் 159 என தொற்றுக்கள் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நேற்று மாத்திரம் கிழக்குமாகாணத்தில்1389பேருக்கு பீ.சீ.ஆர் மற்றும்அன்ரிகனபரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.