புரவி சூறாவளி அச்ச நிலை திருகோணமலையின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

கடல் தொழில் முற்றாக ஸ்தம்பிதம்.
(ஹஸ்பர் ஏ ஹலீம் )
புரவி சூறாவளி அச்ச நிலை ஏற்பட்டுள்ளதால் திருகோணமலை மாவட்டத்தில் கடற் பிரதேசங்களில் கடுமையான காற்று வீசி வருகின்றது, கடல் கடும் கொந்தளிப்பான நிலையில் காணப்படுகின்றது.

திருகோணமலை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
வங்களா விரிகுடா கடலில் தற்போது ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதுடன் காற்றும் வீசி வருகின்றது.
மாவட்டத்தின் கரையோர தாழ்நில பிரதேசங்களான மூதூர்,  மூதூர் கிழக்கு,  கிண்ணியா, புல்மேட்டை,  தம்பலகாமம், குச்சவெளி, வெருகல் உட்பட பல பகுதிகளில் வெள்ள நீரால் நிரம்ப ஆரம்பித்துள்ளதுடன்,  வயல் நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
திருகோணமலை கடற் பிரதேசங்களில் காற்று வீசி வருவதால் மீன்பிடிக் கலங்களை மீனவர்கள் தூர இடங்களில் நிறுத்தியுள்ளனர், சில இடங்களில் மீன்வாடிகள் காற்றினால் சேதமடைந்துள்ளன ஆழ் கடல் மீனவர்கள் தமது படகுகள் மற்றும் தோணிகளை கரையை நோக்கி நகர்த்தி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாமென தொடர்ந்தும் வானிலை அவதான நிலையம் கேட்டுள்ளது.