(அஸ்லம் எஸ்.மௌலானா)
கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் மேலும் 04 பேருக்கு கொரோனா இன்று புதன்கிழமை (02) வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எல்.எம்.அஜ்வத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;
அக்கரைப்பற்று உப கொத்தணி ஊடாக சாய்ந்தமருதில் ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவருடன் தொடர்புடையவர்களே புதிதாக கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.
இதன்படி சாய்ந்தமருதில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 07 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் முதலாவது அலையில் கொரோனா தொற்றுக்குள்ளான சாய்ந்தமருதை சேர்ந்த முதலாவது கொரோனா தொற்றாளர் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.